பரமக்குடி வைகை ஆற்றுப் பாலத்தில் மணல் அகற்றிய நெடுஞ்சாலைத்துறை
தினமலர் செய்தி எதிரொலிபரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றுப் பாலத்தில் குப்பை மற்றும் மணல் குவிந்திருந்த நிலையில் தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதால் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி சுத்தம் செய்தனர். பரமக்குடியில் இருந்து ஆற்றின் மறுகரைக்கு செல்ல வைகை ஆற்றுப்பாலம் மட்டுமே இருக்கிறது. இப்பகுதியில் மழை நீர் வழிந்தோட ஆங்காங்கே குழாய்கள் உள்ளன. இந்த பாலத்தில்இறுதி யாத்திரையின் போது துாவப்பட்ட பூக்கள்,மணல் மேடு, குழாய்களில் அடைப்பை உண்டாக்கியது. இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று நாள் முழுவதும் மழை பெய்த நிலையிலும் நெடுஞ்சாலை துறையினர் ஒட்டுமொத்த மணல் மற்றும் குப்பையை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாலத்தில் குவிந்திருந்த மணலை சுட்டிக்காட்டிய தினமலர் நாளிதழ், அகற்றிய நெடுஞ்சாலை துறையினருக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர். வரும் நாட்களில் ரோடு மற்றும் பாலம் பகுதியை துாய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.