உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாடகி இசைவாணி மீது ஹிந்து  பாரத முன்னணி புகார்

பாடகி இசைவாணி மீது ஹிந்து  பாரத முன்னணி புகார்

ராமநாதபுரம்: சுவாமி ஐயப்பன் குறித்து பக்தர்கள் மனம் புண்படும் வகையில் பாடிய பாடாகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தியது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா புகார் மனு அளித்துஉள்ளார். அதில், நீலம் கலாச்சார மையத்தின் நிறுவனத் தலைவர் இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாடகி இசைவாணி சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறாக பாடியுள்ளார். பக்தர்கள் மனதை புண்படுத்திய இசைவாணி, பா.ரஞ்சித் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை