உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவருக்கு தொல்லை விடுதி காப்பாளர் கைது

மாணவருக்கு தொல்லை விடுதி காப்பாளர் கைது

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் விடுதி காப்பாளர் கவியரசன் 23, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கமுதி அருகே காட்டு எமனேஸ்வரத்தை சேர்ந்த 15 வயது மாணவர் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மாணவருக்கு விடுதி காப்பாளர் கவியரசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கவியரசனை போக்சோ சட்டத்தில் கமுதி மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,பேபி இசக்கி பிரகத்தம்பாள் கைது செய்தார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை