உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் உயிர்தப்பினர்

ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் உயிர்தப்பினர்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்த ஒரு விசைப்படகு சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியது. அதில் இருந்த 7 மீனவர்கள் உயிர்தப்பினர்.ராமேஸ்வரத்தில் இருந்து பிப். 8 ல்420 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோஸ்லன் என்பவரது படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் வலையை வீசி மீன்பிடித்த போது திடீரென வீசிய சூறாவளியில் படகு சிக்கி பக்கவாட்டு மரப்பலகை உடைந்தும் கடல்நீர் புகுந்தது. இதனால் படகு மெல்ல மூழ்க துவங்கியதும், அதில் இருந்த 7 மீனவர்களும் அவ்வழியாக மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகின் மீனவர்களிடம் உதவி கோரினர். இதனையடுத்து 7 மீனவர்களும் மீட்கப்பட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரைக்கு வந்திறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ