உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய் அழுகல் நோயை  கட்டுப்படுத்த யோசனை

மிளகாய் அழுகல் நோயை  கட்டுப்படுத்த யோசனை

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ஈரப்பதத்தால் மிளகாய் பயிரில் காய் அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறுகையில், 2024 அக்., நவ., சாகுபடி செய்த மிளகாய் செடிகளில் தற்போது அறுவடை நடக்கிறது. இந்நிலையில் மார்ச் மாதம் மழையால் ஏற்பட்ட குளிர்ந்த காலநிலை மாற்றத்தால் மிளகாய் செடிகளில் காய் அழுகல் நோய் காணப்படுகிறது. இந்நோயால் மிளகாய் சோடையாகிறது. இதனால் தரம் குறைந்த மிளகாய் விலை குறைவால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இந்த நோயை கட்டுப்படுத்த மிளகாய் செடிகள் மீது மாங்கோசெப் அல்லது கார்பெண்டசிம் துாள் 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஆர்கானிக் முறையில் சூடோமோனஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி மருந்தை ஒரு லிட்டர் நீரில் 3 கிராமம் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை