ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை
கடலாடி: ஒரு கால பூஜை நடக்கும் கோயிலில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியும் நடவடிக்கையை எடுக்காத நிலை தொடர்வதாக பூஜாரிகள் குற்றம் சாட்டினர். கடலாடியை சேர்ந்த கோயில் பூஜாரிகள் நல சங்க தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை கோயில்களில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட பூஜாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது.ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலை துறை உதவி ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் சென்னை ஹிந்து சமய அறநிலைத்துறை கூடுதல் கமிஷனர் சுகுமாரிடம் மாநில கோயில் பூஜாரிகள் நல சங்கம் தலைமை அறிவிப்பிற்கிணங்க புகார் தெரிவித்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஹிந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு கால பூஜை நடக்கும் பூஜாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்தும் அறிக்கையை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு கடிதம் கிடைக்கப்பெற்றது என்றார்.