கல்லுாரியில் இப்தார் நோன்பு
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார்.கீழக்கரை சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் டேனியல், உத்தரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன், முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன், துணை முதல்வர் செந்தில்குமார், செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், அரபிக் கல்லுாரி பேராசிரியர் பயிஸ் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் செய்யது மதார் மைதீன் நன்றி கூறினார்.