மருத்துவமனை முன்பு சீமை கருவேல மரங்கள்
கடலாடி : கடலாடி அரசு தாலுகா மருத்துவமனை முன்பு அதிகளவில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.கடலாடி தாலுகா மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும். நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.