உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர்

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பெய்து வரும் மழையால் பெரிய கண்மாயில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது.தமிழகத்தின் 2-வது பெரிய கண்மாய் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீரால் 20 பாசன மடைகள் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் பாசனம் பெறுகிறது. வடக்கில் சிவகங்கை மாவட்டம் சருகணி, சூரியன் கோட்டை ஆறு வழியாகவும், தெற்கில் வைகை ஆறு அரசடிவண்டல் கீழ் நாட்டார் கால்வாய் வழியாகவும், பாசன நீர் வருகிறது.தற்போது மழையால் கண்மாயில் நீர் தேங்குகிறது. கடந்த ஆண்டு அக்., கடைசி வாரத்தில் பெரிய கண்மாயில் பாதி அளவு தண்ணீர் தேங்கியது. தற்போது சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது.இதுவரை ஒரு அடி தண்ணீர் கூட கண்மாயில் தேங்காத நிலை உள்ளதால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ