உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வட்டான்வலசையில் கைக்கு எட்டிய குடிநீர் வாய்க்கு எட்டவில்லை: கிராம மக்கள் அவதி

வட்டான்வலசையில் கைக்கு எட்டிய குடிநீர் வாய்க்கு எட்டவில்லை: கிராம மக்கள் அவதி

உச்சிபுளி : மண்டபம் ஊராட்சி ஒன்றியம் செம்படையாளர்குளம் ஊராட்சி வட்டான்வலசைக்கு குடிநீர் வழங்க குழாய் பதிக்கும் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் குடம் ரூ.10க்கு விலைக்கு வாங்கி சிரமப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரித்துள்ளனர்.வட்டான்வலசை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர், விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்குகுடிநீர் வசதியின்றி மக்கள் தினமும் குடம் ரூ.10க்கு வாங்கி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சத்து 10ஆயிரம் மதிப்பில் குழாய் பதித்து தெருக்குழாய்கள் அமைத்து வட்டான்வலசைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். அப்பணியை பாதியில் நிறுத்தி விட்டனர். இதனால் கைக்கு எட்டிய குடிநீர் வாய்க்கு எட்டவில்லை. பல ஆண்டுகளாக குடிநீருக்காக ஊர் ஊராக அலைகிறோம் என மக்கள் கூறினர். செம்படையாளர்குளம் ஊராட்சி துணைத் தலைவர் எம்.காளீஸ்வரி கூறுகையில், வட்டான் வலசை, உசிலம்காட்டு வலசை ஆகிய ஊர்களுக்கு குடிநீர் வழங்க குழாய் பதிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை முறையாக பயன்படுத்தாமல் குழாய், திருகு குழாய் அமைக்காமல் விட்டு விட்டனர். இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறியதும் வைத்திருந்த கல்வெட்டை கூட அகற்றியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வரை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. வட்டான் வலசை மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ