செய்யது அம்மாள் நர்சிங் பள்ளி துவக்க விழா
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி அருகே புதிதாக செய்யது அம்மாள் நர்சிங் பள்ளி துவக்க விழா நடந்தது.ராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம் அப்துல்லா துவங்கிய செய்யது அம்மாள் மருத்துவமனை, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி அருகே புதிதாக செய்யது அம்மாள் நர்சிங் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவிற்கு தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.செய்யது அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாபு அப்துல்லா, உறுப்பினர்கள் டாக்டர் செய்யது அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தனர். நர்சிங் பள்ளி முதல்வர் ஆர்த்தி வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் அமுதா ராணி நர்சிங் பள்ளியை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜூன் குமார் வாழ்த்தி பேசினார்.விழாவில் டாக்டர்கள் பாத்திமா, ராசிகா, அட்டிப், ஷிபா, பாத்திமா சானாஸ், ஹாரிஸ், இஜாஸ், ஆயிசத்துல் நிஷிதா, ரஹ்மத் அஜிதா, பரீனா பேகம், பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி, மாவட்டக் கவுன்சிலர் ராமவன்னி, லாந்தை ஊராட்சி தலைவர் கவிதா பங்கேற்றனர். நர்சிங் பள்ளி துணை முதல்வர் ஜூலி நன்றி கூறினார்.