உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவமனை புதிய கட்டடம் திறப்பு

மருத்துவமனை புதிய கட்டடம் திறப்பு

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டடங்கள் சேதமடைந்ததால் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டி தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.1.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி முன்னிலையில் தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன் திறந்து வைத்தார். பேரூராட்சி தலைவர் மவுசூரியா குத்துவிளக்கு ஏற்றினார். துணைத் தலைவர் ராசு உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை