போதைப் பொருட்கள், தங்கம் கடத்தல் அதிகரிப்பு: மாஜி அமைச்சர் புகார்
கீழக்கரை, :கீழக்கரையில் உள்ள தனியார் மஹாலில் அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கீழக்கரை நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமை வகித்தார். இதில் தீபாவளி பரிசு வழங்கி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய தாவது: ராமநாதபுரம் சட்டசபை தேர்தல் பிரசார அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவோம் என சொன்னார் கொண்டு வரவில்லை. நகராட்சிக்குள் ஒரே ஊழல் நடக்கிறது. கீழக்கரை வழியாக போதை பொருட்கள், கஞ்சா, தங்கம் கடத்தல் அதிகம் நடக்கிறது. பள்ளிக்கூடங்களுக்கு அருகே புகையிலை பொருட்கள், கூலிப், கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவைகளை விற் கின்றனர். குழந்தைகள் முதல் 80 வயது பாட்டி வரை பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றார். மாவட்ட துணை செயலாளர் ராமசேது, ராம்கோ முன்னாள் தலைவர் சுரேஷ், பொருளாளர் ஹரி நாராயணன், ஐ.டி.,விங் பிரிவு, நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.