உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோட்டைக்கரை ஆற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு: கண்டுகொள்ளாத போலீசார்

கோட்டைக்கரை ஆற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு: கண்டுகொள்ளாத போலீசார்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டக்கரை ஆற்றுப் பகுதியில் இரவில் மணல் திருட்டு அதிகரித்துள்ள நிலையில் போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் சருகணி ஆற்று முடிவிலிருந்து கோட்டைக்கரை ஆறு துவங்கி ஆனந்துார், ஆயங்குடி , சனவேலி வழியாக கிழக்கு கடற்கரை சாலை சேந்தனேந்தல் ஓடை வழியாக இந்த ஆற்றில் செல்லும் உபரி நீர் கடலில் கலக்கிறது.பருவமழைக் காலங்களில் சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் உள்ள உபரி நீர் இந்த ஆற்றில் செல்வதால் ஆற்றில் மணல் திட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் ஆற்றுப்பகுதியில் இரவில் டிராக்டர்களில் மணல் திருட்டு நடக்கிறது.குறிப்பாக சனவேலி பாலம், தெற்கனேந்தல், கொக்கூரணி, செட்டிய கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் இரவில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆற்றுப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் மணல் திருட்டு கும்பல் இதை சாதகமாக பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.அப்பகுதியில் மணல் திருட்டு குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ