இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
பரமக்குடி, : பரமக்குடி காந்தி சிலை முன்பு ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளார் பெருமாள் தலைமை வகித்தார். நீதித்துறையை களங்கப்படுத்திய ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும். பரமக்குடி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து அராஜக போக்கை கடைபிடிக்கும் உதவி இயக்குனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கமுதி தாலுகா வல்லந்தை ஊராட்சி போத்தநதி கிராமத்தில் அரசு அமைத்த ஆழ்குழாயில் தண்ணீர் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், கைத்தறி சங்க மாநில தலைவர் ராதா, கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், ஜீவானந்தம், லோகநாதன், ருக்மாங்கதன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.