கூட்டமைப்பு துவக்கம்
கீழக்கரை: கீழக்கரையில் பொதுமக்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. கூட்டமைப்பின் தலைவராக சேகு பஷீர் அகமது, துணைத் தலைவர்களாக முகமது அஜீகர், முகமது சுபைர், செயலாளராக சப்ரஸ் நவாஸ், துணை செயலாளர்களாக பாசித் இலியாஸ், நெய்னா முகமது, பொருளாளராக முகமது ஜலில், உதவி பொருளாளராக முகமது ப்ரூஸ் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு தொலைதுாரத்தில் இருந்து வரக்கூடிய பஸ்கள் வந்து செல்லவும், கீழக்கரை நகரின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுக்கவும், சட்ட விரோதமாக விற்கப்படும் மது விற்பனையை தடை செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருங்காலங்களில் சிறந்த கல்வியாளர்களை விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.