உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணியில் புத்தாக்க பயிற்சி

திருப்புல்லாணியில் புத்தாக்க பயிற்சி

திருப்புல்லாணி: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திருப்புல்லாணி வட்டாரம் சார்பில் பள்ளிகளில் காலை உணவு அளிக்கும் பணியாளர்களுக்கான புத்தாக்கத் திட்ட பயிற்சி நடந்தது. டிச.26 முதல் 31 வரை உள்ள நாட்களுக்கு நான்கு பிரிவுகளாக புத்தாக்கப் பயிற்சி நடக்கிறது.திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட 79 தொடக்கப் பள்ளிகளில் உள்ள பணியாளர்களுக்கு பள்ளிகளில் வழங்கக்கூடிய காலை உணவு திட்டத்தில் வெண் பொங்கல், ரவை கிச்சடி, கோதுமை ரவை உப்புமா, காய்கறி சாம்பார், அரிசி உப்புமா, சேமியா உப்புமா உள்ளிட்ட தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை திருப்புல்லாணி வட்டார இயக்க மேலாளர் சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது ஆகியோர் செய்திருந்தனர். 160 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை