மேலும் செய்திகள்
தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்
18-Dec-2025
திருவாடானை: திருவாடானை தபால் அலுவலகத்தில் ஜன.,3 வரை காப்பீடு முகாம் நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும். தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு ஆகியவற்றில் வாடிக்கையாளர்களின் புகார் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஜன.,3 வரை நடைபெற உள்ளது. இது குறித்து திருவாடானை தபால் நிலைய அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை தலைமை தபால் அலுவலகத்தில் காப்பீடு தொடர்பான குறைகள், பிரீமியம் செலுத்துதல் பற்றிய விபரங்கள், பாலிசி திருத்தம், பாலிசி புதுப்பிப்பு ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. தபால் ஆயுள் காப்பீடு, கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். ஆதியூர், அஞ்சுகோட்டை, கொட்டகுடி, திருவெற்றியூர், தினையத்துார் ஆகிய கிளை தபால் அலுவலகங்களுக்கும் சென்று குறைகளை தெரிவிக்கலாம். ஜன.,3 வரை முகாம் நடைபெறும் என்றனர்.
18-Dec-2025