உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கைத்தறி நெசவாளருக்கு டிச.10 முதல் 25 வரை காப்பீடு அட்டை வழங்கும் முகாம்

கைத்தறி நெசவாளருக்கு டிச.10 முதல் 25 வரை காப்பீடு அட்டை வழங்கும் முகாம்

தினமலர் செய்தி எதிரொலிபரமக்குடி: பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதன் பேரில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ காப்பீடு அட்டை செயல்படுத்தப்பட்டு வந்தது. திட்டம் கைவிடப்பட்ட நிலையில் நெசவாளர் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் சிரமம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நெசவாளர்களையும் இணைக்க முகாம் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் சேரன் கூறியதாவது: நெசவாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், நெசவாளர் அடையாள அட்டை அல்லது பேச்சான் கார்டுடன் வந்து காப்பீடு அட்டை பெற்றுக் கொள்ளலாம். டிச. 10 முதல் 12 வரை எமனேஸ்வரம் முருகன் நெசவாளர் சங்கத்தில் எமனேஸ்வரம் பகுதி நெசவாளர்களும், டிச. 16, 17 வரை பரமக்குடி லோக மானிய திலகர் சங்கத்தில் பரமக்குடி நெசவாளர்கள், டிச. 18, 19ல் மகாலட்சுமி சங்கத்தில் ஜீவா நகர் பகுதியினர், டிச. 20ல் சோமநாதபுரம் பகுதி மக்கள் தென்னரசு சங்கத்திலும், டிச. 21 சுந்தர் நகர் மக்கள் அன்னை சந்தியா மகளிர் சங்கத்திலும், டிச. 23 கணபதி காலனியினர் அன்னை சாரதா மகளிர் சங்கத்திலும், டிச. 25 மகாலட்சுமி, காந்திஜி காலனி மக்கள் ஸ்ரீ விஷ்ணு சங்கத்திலும் நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ