உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலமுந்தலில் சவுக்கு மரம் நடும் பணி தீவிரம் மண்ணரிப்பை தடுக்கிறது

மேலமுந்தலில் சவுக்கு மரம் நடும் பணி தீவிரம் மண்ணரிப்பை தடுக்கிறது

சாயல்குடி : சாயல்குடி அருகே மேலமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையில் சவுக்கு மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.பொதுவாக கடற்கரையோரங்களில் சவுக்கு மரங்கள் பயன்பாட்டில் கடற்கரையை மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கின்றன. அவற்றின் வேர்கள் மணலை பிடித்து வைத்திருக்கிறது. சவுக்கு மரங்கள் காற்றில் உள்ள பாதரசம் மற்றும் பிற மாசுபடுத்திகளை அகற்றுகின்றன. இது காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இவை நிலத்தடி நீரை மேம்படுத்தவும் அவற்றின் வேர்கள் நீரை உறிஞ்சி நிலத்தடி நீரை பாதுகாக்கின்றன. இவற்றை வலியுறுத்தி 10 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் மேலமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் நடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சாயல்குடி வனச்சரக அலுவலகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !