உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல கூடைப்பந்து போட்டி 

கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல கூடைப்பந்து போட்டி 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் அண்ணா பல்கலை 16--வது ஆண்டு மண்டலங்களுக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.துவக்க விழாவிற்கு கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அட்டிப் அப்துல்லா துவக்கி வைத்தார். முதல்வர் பெரியசாமி பேசினார். 10 பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முதலிடம், மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி 2ம் இடம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி 3-ம் இடம் பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன், பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி