உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்வதேச யோகா தின விழா

சர்வதேச யோகா தின விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ். மடையில் உள்ள அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் கே.வி மஞ்சரி பங்கேற்று யோகக் கலையின் பயன்கள் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். ஏராளமான மாணவர்கள் யோகாசனம் செய்து காண்பித்தனர்.*ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் சார்பில் கோட்ட அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை உதவி கண்காணிப்பாளர் டென்னிஸ் தாசன், ராமநாதபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி ேஷக் தாவூத் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை