உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடி வாரச்சந்தை வசூலில் முறைகேடு: மக்கள் புகார்

திருப்பாலைக்குடி வாரச்சந்தை வசூலில் முறைகேடு: மக்கள் புகார்

ராமநாதபுரம்: திருப்பாலைக்குடி ஊராட்சியில் வாரச்சந்தை கடைகளில் வசூலில் முறைகேடு நடக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் புகார் அளித்துள்ளனர்.திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையில் கலெக்டரிடம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஊராட்சி அலுவலக பின்புறம் வாரச்சந்தை ஞாயிறு அன்று நடக்கிறது. 130 கடைகளுக்கு ஊராட்சியில் பணம் வசூலிக்கின்றனர். ரூ.9 லட்சத்து 36 வசூல் பணம் முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஊரில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வசூல் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும். வாரச்சந்தையை அரசே ஏற்று நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.திருப்பாலைக்குடி ஊராட்சி தலைவர் உமர் பாரூக் கூறுகையில், வாரச்சந்தையில் முறையாக கட்டணம் வசூலித்து கணக்கு வைத்துள்ளோம். முறைகேடு எதுவும் நடக்கவில்லை. வாரச்சந்தையில் கூரை மற்றும் சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சிலர் வேண்டும் என்றே தவறான தகவல்களை தருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ