உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயிற்சி நிறைவு செய்த 89 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

பயிற்சி நிறைவு செய்த 89 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை சந்தீஷ்எஸ்.பி., வழங்கினார். ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலக கூட்ட அரங்கில்நடந்த நிகழ்ச்சிக்கு சந்தீஷ் எஸ்.பி., தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி.க்கள் சுப்பையா, காந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆயுதப்படைக்கு 16 பெண், ஒரு ஆண், தீயணைப்புத்துறைக்கு 26 பேர், பட்டாலியன் பிரிவுக்கு 46 பேர் என 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை சந்தீஷ் எஸ்.பி., வழங்கினார். அதிகாரிகள் பணி நியமனம் பெற்றவர்களை வாழ்த்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை