மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
20-Dec-2024
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த விழாவில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட துவக்க நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி, முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு, வங்கி மேலாளர் கார்த்திகேயன், கீழக்கரை நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா, முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் நிர்மல் கண்ணன், தாசில்தார் ஜமால் முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Dec-2024