உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.ஆலங்குளத்தில் முடிவடையாத நிலையில் ஜல்ஜீவன் திட்டப் பணி

டி.ஆலங்குளத்தில் முடிவடையாத நிலையில் ஜல்ஜீவன் திட்டப் பணி

சிக்கல்: சிக்கல் அருகே பேய்க்குளம் ஊராட்சி டி.ஆலங்குளத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டம் துவக்கப்பட்டும் பணிகள் முடிவடையாமல் உள்ளது.டி.ஆலங்குளத்தில் 500க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். வீடுகள் தோறும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் நோக்கத்தோடு மத்திய அரசால் அமுல்படுத்தப்பட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் வழித்தட குழிகள் ஏற்படுத்தப்பட்டு பாதியிலேயே கிடப்பில் உள்ளது. டி. ஆலங்குளம் கிராம மக்கள் கூறியதாவது: நான்கு மாதங்களாக குறிப்பிட்ட தெருக்களில் ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் திறந்த நிலையில் உள்ளன. இதனால் சிறுவர்கள் முதியவர்கள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் குழாய்களை பதித்துள்ளனர். இது என்ன நியாயம்.கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிதி வீணடிப்பை தடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ