கமுதி தாலுகாவில் நாளை ஜமாபந்தி
முதுகுளத்துார் : கமுதி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் மனுக்கள் அளித்து மக்கள் பயன்பெறலாம் என்று தாசில்தார் காதர் முகைதீன் கூறினார். அவர் கூறியதாவது:கமுதி தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு 1434ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கமுதி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து தலைமை வகிக்கிறார்.மே 20ல் அபிராமம் உள்வட்டம், மே 21ல் கமுதி கிழக்கு உள்வட்டம், மே 23ல் கமுதி மேற்கு உள்வட்டம், மே 27ல் கோவிலாங்குளம் உள்வட்டம், மே 28ல் பெருநாழி உள்வட்டம் கிராமங்களுக்கு நடக்கிறது.கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என்றார்.