உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

கீழக்கரை : கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி மற்றும் முஸ்லிம் தொழில் வல்லுநர்களின் சங்கம் ஆகியவை சார்பில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கல்லுாரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். முஸ்லிம் தொழில் வல்லுநர்களின் சங்கத்தின் தலைவர் ஷாகித் ஹைடிர் நேர்முக தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.முகாமில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் நேர்முகத்தேர்வு செய்தன.423 பட்டதாரிகள் பதிவு செய்தனர். 107பேர் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் சேக் தாவூத்கான், உள்தர உத்தரவாத குழுவின் ஒருங்கிணைப்பாளர் சீனி ரபவூப் நிஷா, கல்லுாரியின் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுதா அபிராமி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி