உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூடோ போட்டி: பரமக்குடி சவுராஷ்டிரா பள்ளி மாணவர்கள் 14 பதக்கம் வென்றனர் 6 பேர் மாநில போட்டிக்கு தகுதி

ஜூடோ போட்டி: பரமக்குடி சவுராஷ்டிரா பள்ளி மாணவர்கள் 14 பதக்கம் வென்றனர் 6 பேர் மாநில போட்டிக்கு தகுதி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டிகளில் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 பேர் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதில் 6 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவில் நடந்த ஜூடோ போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பதக்கங்களை பெற்றனர்.இதன்படி 6 தங்கம், 6 வெள்ளி, மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்றனர். தங்கம் வென்ற மாணவர்கள் 2025 ஜன., மாதம் கன்னியாகுமரியில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். மாணவர்களை கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் ரெங்கன், தலைமை ஆசிரியர் நாகராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ