கடலாடி கல்லுாரியில் குடிநீர் இணைப்பு வேண்டும்
கடலாடி : -கடலாடி அரசு கலை- அறிவியல் கல்லுாரியில் காவிரி குடிநீர் வசதி இல்லாததால் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் இல்லை உள்ளது. கடலாடி அரசு கலை-அறிவியல் கல்லுாரியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணறு கடும் உவர் நீராக உள்ளதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அத்தியாவசிய புழக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கல்லுாரி நிர்வாகத்தினர் டிராக்டர் மூலம் விலைக்கு வாங்கி குடிநீரை பயன்படுத்துகின்றனர். எனவே கருங்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் கல்லுாரிக்கு காவிரி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கல்லுாரியின் இரண்டாம் மேல் தளத்தில் மின்சார பழுது ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை சரி செய்யாமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி நேரம் பாதிக்கப்படுகிறது. அவற்றையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.