உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கன்னிமார் அம்மன் பொங்கல்

கன்னிமார் அம்மன் பொங்கல்

முதுகுளத்துார் ; முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் கன்னிமார் அம்மன், கருப்பணசாமி, சக்தி விநாயகர் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.நேற்று பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். கன்னிமார் அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது. கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக மக்கள் பூத்தட்டு எடுத்து கோயிலுக்கு வந்தனர். ஏற்பாடுகளை மேலமானாங்கரை நேதாஜி இளைஞர் சங்கம், கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை