உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கர்நாடக ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பஸ்--அரசு பஸ் மோதல்: 17 பேர் காயம் 

கர்நாடக ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பஸ்--அரசு பஸ் மோதல்: 17 பேர் காயம் 

ராமநாதபுரம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் மினி பஸ்சும், அரசு பஸ்சும் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் காயமடைந்தனர்.பெங்களூருவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் மினி பஸ்சில் ராமேஸ்வரம் நோக்கி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் வாலாந்தரவை பகுதியில் வரும் போது நேருக்கு நேர் மோதியது.இதில் ஐயப்ப பக்தர்கள் மஞ்சுநாதன் 27, சச்சின் 25, நவீன்பாபு 35, உட்பட 17 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை