மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தியில் பால்குடம் ஊர்வலம்
08-Sep-2024
ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் உள்ள மயூரநாத பெருமான், பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் கோயிலில் கார்த்திகை பூஜை கொண்டாடப்பட்டது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் சண்முக கவசம் உள்ளிட்ட பக்தி பாடல்களை பாடினார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.ராமநாதபுரம்: குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில், வழிவிடுமுருகன் கோயில் குமரய்யாகோயில், வெளிப்பட்டணம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயில், மாவட்ட விளையாட்டு அரங்கம் நீச்சல் குளம்அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட இடங்களில் கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
08-Sep-2024