உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த கொல்லம் தோப்பு சாலை: மக்கள் அவதி

மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த கொல்லம் தோப்பு சாலை: மக்கள் அவதி

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே கொல்லம் தோப்பில் இருந்து காரான் செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதுடன் இருபுறங்களிலும் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதால் இரவில் வாகனங்களில் சென்றுவர மக்கள் சிரமப்படுகின்றனர். கொல்லம் தோப்பில் இருந்து காரான் செல்லும் தோட்ட சாலை 3 கி.மீ.,ல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். சாலையின் இரு புறங்களிலும் உள்ள கம்பங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையோரங்களில் குப்பை தேங்கும் நிலையில் அள்ள கூட வழியின்றி உள்ளது. மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரான் ஊராட்சியில் தனி அலுவலர் ஆய்வு செய்து மின்விளக்குகளை பழுது நீக்கி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை