மேலும் செய்திகள்
கும்பாபிஷேகம்
17-May-2025
நயினார்கோவில்: -பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் ச.சிறுவயல் கிராமத்தில் சித்தி விநாயகர், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று காலையில் யாக வேள்விகள், மற்றும் மகாபூர்ணாஹூதி நடந்தது. பின்னர் சித்தி விநாயகர், முத்து மாரியம்மன் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ச.சிறுவயல் கிழக்கு கிராம தலைவர் சண்முகம், இளைஞர் நற்பணி மன்றம், மகளிர் மன்றத்தினர் பங்கேற்றனர்.திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி சிலையப்பன் வலசையில் உள்ள பாலமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 7 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலையில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு 11 வகையான அபிஷேக அலங்காரத்தில், தீபராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி: கமுதி அருகே கோரைபள்ளம் கிராமத்தில் மாரியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜை, நாடி சந்தனம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மாரியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
17-May-2025