உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே மீசல் கிராமத்தில் தர்ம முனிஸ்வரர், வீரபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன், கலச புறப்பாடுக்கு பிறகு கோபுர கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டது. பின்பு தர்ம முனிஸ்வரர், வீரபெருமாள் பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * சாயல்குடி அருகே வேடக்கரிசல்குளம் உசிலங்குளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த மே 23ல் யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.நேற்று காலையில் செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி