உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு பரமக்குடியில் சாத்தனுார் மகா சாத்ததையனார் கோயில் தோரண வாயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், தோரண வாயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வடக்கு பரமக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி