மேலும் செய்திகள்
கோயில்களில் விளக்கு பூஜை
14-Mar-2025
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் தம்புராட்டி அம்மன் கோயிலில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிந்தனை மன்றம் சார்பில் விளக்கு பூஜை, சொற்பொழிவு நடந்தது. தம்புராட்டி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்புபூஜை, 108 விளக்கு பூஜை நடந்தது.கிராம தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராம்குமார், பேராசிரியர் பொன்முத்து, அறக்கட்டளை தலைவர் வெள்ளை பாண்டியன் முன்னிலை வகித்தனர். சிந்தனை மன்றத்தின் தலைவர் ஆறுமுகம் பவுர்ணமி விழா முக்கியத்துவம், விளக்கு பூஜை மகிமை, குலதெய்வ வழிபாடு மற்றும் விடுதலை போரில் நேதாஜி, தேவருடன் இணைந்து போராடிய வீரர்களின் தியாகம் பற்றி சொற்பொழிவு ஆற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
14-Mar-2025