உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐயப்பன் கோயிலில்  விளக்கு பூஜை

ஐயப்பன் கோயிலில்  விளக்கு பூஜை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செட்டிய தெரு சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் விளக்கு பூஜை நடந்தது. வெளிப்பட்டணம் ஆயிர வைசிய மகாஜன சபையின் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடக்கும். இந்த ஆண்டு 36வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் சுமங்கலிகள், இளம் பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். ஐயப்பனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ