உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் விளக்கு பூஜை

கோயில்களில் விளக்கு பூஜை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மகாதேவர் கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி முன்னிட்டு விளக்குபூஜை நடந்தது. மூலவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பின்பு 108 விளக்கு பூஜை நடந்தது.முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் பக்தர்கள் குழு சார்பில் 108 விளக்கு பூஜை நடந்தது.மூலவரான செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி