உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லேப்டாப் திருடியவர் கைது

லேப்டாப் திருடியவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை பகுதியில் தனியார் இரும்பு கடை மற்றும் பெயின்ட் கடை உள்ளது. நவ.,26 இரவில் கடை ஊழியர்கள் கடையை அடைத்து சென்ற நிலையில் பின்பக்க தகர ஷட்டரை உடைத்து கடையில் இருந்த லேப்டாப், அலைபேசி மற்றும் ரூ.6000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பொறுப்பாளர் முருகன் 47, புகாரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பெரிய கண்ணனுார் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் 44, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து, ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ