மேலும் செய்திகள்
ஏகாதசி பூஜை
26-Mar-2025
திருப்புல்லாணி : மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ராம பிரானின் பிறந்த நாளை கொண்டாடும் விழாவான ராம நவமி உற்ஸவம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.வளர்பிறையில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் ராம நவமி கொண்டாடப்படுகிறது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் சன்னதி அருகே உள்ள தெர்ப்பசயன ராமர் சன்னதியில் உற்ஸவ மூர்த்திகளான ராமபிரான், லட்சுமணர், சீதா பிராட்டியார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ராம நாம நவமி உற்ஸவத்தில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது.நேற்று காலை 9:00 மணிக்கு உற்ஸவமூர்த்திகளுக்கு விசேஷத் திருமஞ்சனமும், சாற்றுமுறை கோஷ்டி பாராயணமும் நடந்தது.ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் ராம நாம கீர்த்தனம், நாமாவளி உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. *திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.*பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 32ம் ஆண்டு ராமநவமி விழா நடந்தது. காலை லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் ஏக தின லட்சார்ச்னை விழா நடத்தப்பட்டது. பரமக்குடி அனுமார் கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி விழாவின் ஒன்பதாம் நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு ராம ஜனனத்தையொட்டி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் நெல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (ஏப்.,7) காலை ராமர் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். பின்னர் சீதா-ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது. எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் நடந்தது. சுந்தரராஜ பெருமாள் கோயிலில், பெருமாள் ராமாவதார சேவையில் அனுமந்த வாகனத்தில் அமர்ந்து உலா வந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
26-Mar-2025