உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முறையான வளர்ப்பு இல்லாததால் விபத்தில் பலியாகும் கால்நடைகள்

முறையான வளர்ப்பு இல்லாததால் விபத்தில் பலியாகும் கால்நடைகள்

திருவாடானை: கால்நடைகள் முறையான வளர்ப்பு இல்லாததால் ரோட்டில் திரிவதால் வாகனங்கள் மோதி இறப்பது அதிகரித்து வருகிறது.திருவாடானை, தொண்டி அருகேயுள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் உள்ள முக்கிய பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சரியான உணவு, தீவனங்கள் கிடைக்காததால் சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர், ரோட்டோரங்களில் கிடக்கும் குப்பையில் உள்ள உணவு கழிவுகளை தின்று பசியை போக்குகின்றன.அப்போது உணவு பொருட்களுடன் பிளாஸ்டிக்கையும் சேர்த்து தின்று விடுவதால் மாடுகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை உணவுக்காக ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகள் இரவு நேரங்களில் ரோடுகளில் படுத்து கொள்கிறது.டூவீலர்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதில் கனரக வாகனங்கள் மோதி கால்நடைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது. சில தினங்களுக்கு முன் திருவாடானை மங்களநாதன் குளம் அருகே மதுரை- தொண்டி சாலையில் ஒரு வாகனம் மோதி கன்றுகுட்டி இறந்தது.கால்நடை வளர்ப்பவர்கள் உரிய முறையில் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இல்லையேனில் ஊராட்சி நிர்வாகம் ஆங்காங்கே பட்டிகள் அமைத்து ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து பட்டிகளில் அடைத்து கால்நடைகளை தேடிவரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ