உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், பேல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம், கடலாடி, கமுதி, மண்டபம், திருப்புல்லாணி, போகலுார், நயினார்கோவில், பரமக்குடி, முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான மோட்டார் இயக்கும் பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். செயலாளர் அய்யாத்துரை, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சந்தானம், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் குருவேல் முன்னிலை வகித்தனர். ஊராட்சிகளில் பணிபுரியும் தண்ணீர் டேங் ஆப்ரேட்டர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழங்குவது போல் வழங்க வேண்டும். அரசு உத்தரவுப்படி ஊராட்சிகளில் பணிபுரியும் தண்ணீர் டேங் ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் மோட்டார் இயக்குவதற்கான சிறப்பு படி ரூ.200, கூடுதல் தொட்டிக்கான தொகை ரூ.250 வழங்கவேண்டும். மோட்டார் ஆப்ரேட்டர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை, நல வாரிய அட்டை வழங்க வேண்டும். அரசு உத்தரவை செயல்படுத்த மறுக்கும் ஊராட்சி செயலாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மதியம் 3:00 மணி வரை போராட்டம் நீடித்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்புசெல்வி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பத்மநாபன் ஆகியோர் போராட்ட களத்திற்கு வந்து குறைகளை கேட்டறிந்தார். ஊதிய பிரச்னைக்கு 10 நாட்களில் தீர்வு காண்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை