உச்சிப்புளி பகுதியில் குறைவழுத்த மின் விநியோகத்தால் பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் மின் விநியோகம் சீராகாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உச்சிப்புளி பகுதியில் குறைவழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் உச்சிப்புளி மற்றும்அதனை சுற்றியுள்ள புதுமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள்குறைவழுத்த மின்விநியோகத்தை சீரமைக்கும் பணி செய்யாததால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் டிவி, மிக்சி, மின்விசிறி போன்ற பொருட்கள் பாதிக்கப்படுகின்றன. பல இடங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதாகின்றன. உச்சிப்புளி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் தொடர் மின்தடையால் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் துாக்கத்தை தொலைத்துவிட்டு தெருவில் அலையும் சூழல் ஏற்படுகிறது. மின் வாரிய அதிகாரிகள் உச்சிப்புளி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்கி மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.