உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி வைகை ஆற்றை கடந்த மதுரை மழைநீர்: மக்கள் மகிழ்ச்சி

பரமக்குடி வைகை ஆற்றை கடந்த மதுரை மழைநீர்: மக்கள் மகிழ்ச்சி

பரமக்குடி: மதுரையில் இருந்து வந்த மழைநீர் ராமநாதபுரம் மாவட்ட எல்லையாக உள்ள பார்த்திபனுார் மதகு அணையை கடந்து, பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் பரவலாக மழை இன்றி இந்த ஆண்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் நீர்நிலைகள் வற்றி உள்ள சூழலில் ஊற்று நீருக்கும் சிக்கல் உண்டாகி உள்ளது. கடந்த வாரங்களில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இச்சூழலில் மதுரையில் இருந்து 1900 கன அடி வீதம் வைகை ஆற்றில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வந்த தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் மாலை பரமக்குடி வைகை ஆற்றை கடந்தது. இந்த மழை நீர் ஒட்டு மொத்தமாக ஆற்றின் மணல் பரப்பை சற்று நனைக்கும் சூழலில் ஊற்று நீர் பெருக வாய்ப்புள்ளது என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து வரும் நாட்களில் மழை பெய்தால் மட்டுமே இந்த ஆண்டு வறட்சியை தாங்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை