மேலும் செய்திகள்
பட்டையில் அன்னதானம்
11-Jul-2025
பெருநாழி; பெருநாழி அருகே காடமங்கலம் காளியம்மன் கோயிலில் 48 நாட்களுக்கு முன் புதிதாக திருப் பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மண்டல பூஜையை முன்னிட்டு காடமங்கலத்தில் உள்ள காளியம்மன், கருப் பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் முன்புறம் யாக குண்டம் வளர்க்கப்பட்டு உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடந்தது. பழங்கள், வஸ்திரங்கள், மூலிகை பொருள்கள் யாக குண்டத்தில் சமர்ப்பிக்கப் பட்டது. பூஜிக்கப்பட்ட புனித கும்ப நீரால் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
11-Jul-2025