உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாங்குடி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

மாங்குடி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மாங்குடி அய்யனார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் குதிரை எடுப்பு விழா நடத்துவது வழக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேலகன்னிச்சேரியில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அய்யனாருக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை நடந்தது. தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, ராக்கச்சி, பேச்சியம்மன், பைரவர், சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட தவழும் பிள்ளைகளை கிராம மக்கள் முக்கிய விதிகளில் 5 கி.மீ., ஊர்வலமாக துாக்கி வந்தனர். கடந்த ஆண்டு விளைந்த தானியங்களை வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கமுதி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை