உற்பத்தி, சேவை நிறுவனங்கள் உத்யம் பதிவு சான்றிதழ் பெறலாம்
ராமநாதபுரம் : அனைத்து உற்பத்தி,சேவை, வணிக நிறுவனங்கள் மாவட்டத்தொழில் மையம் மூலம் உத்யம் பதிவு சான்றிதழை இலவசமாக பதிவு செய்து பயனடையலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் சேவை, உற்பத்தி, வணிக நிறுவனங்கள் உத்யம் பதிவு சான்றிதழை மாவட்டத் தொழில் மையம் மூலம் இலவசமாக பதிவு செய்யலாம்.இச்சான்றிதழை பயன்படுத்தி தங்கள் நிறுவனங்களுக்கு வேண்டிய அரசுத் துறை அனுமதி மற்றும் குறைந்த வட்டியில் வங்கி கடன் வசதி, உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களையும் விரைவாகவும் மற்றும் எளிதாகவும் பெற முடியும்.மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கும் வேண்டிய வசதிகள் உத்யம் சான்றிதழ் மூலம் பெறலாம்.விருப்பமுள்ள நிறுவனங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இலவசமாக பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.