உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு 18 வகை அபிஷேகம் நடைபெற்று அலங்கார செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வழிபாடு செய்தனர். பின்னர் கோயில் முன்பு பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து முளைப்பாரிகளை குளத்தில் கரைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ